September 28, 2026
தேசியம்
செய்திகள்

கனடா வலுவாகவும் சுதந்திரமாகவும் உள்ளது: மன்னர்!

கனடா வலுவாகவும் சுதந்திரமாகவும்  உள்ளது என மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டில் முதன் முறையாக, மன்னர் செவ்வாய்கிழமை (27) சிம்மாசன உரையாற்றினார்.

புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான பிரதமர் Mark Carney-யின் இலக்குகளை வகுக்கும் வகையில் இந்த உரை அமைந்தது.

கனடா ‘நமது வாழ்நாளில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது’ என தனது உரையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டார்

செலவீனத்தை குறைந்து  முதலீட்டை அதிகரிக்க Mark Carney அரசாங்கம் தனது சிம்மாசன உரையில் உறுதியளித்தது.

புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் துணைவி ராணி Camilla-வுடன் வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை  (26)  கனடா வந்தடைந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னரின் முடிசூட்டு விழாவின் பின்னர், அரச குடும்பத்தினர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்தது.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் பங்கேற்ற மன்னர் சிம்மாசன உரையாற்றினார்.

1977-ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணி நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைத்த பின்னர், கனடாவின் அரசத் தலைவர் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பது இதுவே முதல் முறையாகும்.

கனடாவுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய் மதியம் மன்னர் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்.

Related posts

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடாவுக்குள் வர தடை !

Gaya Raja

கனடாவில் மீண்டும் உயர்கிறதா வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment