தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கும் மன்னர்!

மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது துணைவி ராணி Camilla-வுடன் திங்கட்கிழமை (26) கனடா வருகை தர உள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க இவர்கள் இருவரும் திங்களன்று Ottawa வந்தடைகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னரின் முடிசூட்டு விழாவின் பின்னர், அரச குடும்பத்தினர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்த பயணத்தை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

திங்கள் மாலை தலைநகர் Ottawa-வின் மையப்பகுதியில் உள்ள Lansdowne பூங்காவில் சமூக உறுப்பினர்களை அரச குடும்பத்தினர் சந்திப்பார்கள்.

பின்னர் பிரதமர் Mark Carney, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோரை மன்னர் சார்லஸ், ராணி Camilla Rideau Hall-லில் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

திங்கட்கிழமை ஆரம்பிக்கும் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில், செவ்வாய்கிழமை (27) அரியணையில் இருந்து உரையாற்ற  மன்னரிடம் பிரதமர் Mark Carney கோரியுள்ளார்.

இந்த உரை சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகளை வெளிப்படுத்துகிறது.

1977-ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணி நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைத்த பின்னர் த்தைத் திறந்த பிறகு, கனடாவின் அரசத் தலைவர் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பது இதுவே முதல் முறையாகும்.

Related posts

கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி நடைமுறைக்கு வந்தது!

Lankathas Pathmanathan

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

Lankathas Pathmanathan

பதவி விலக்கப்படுவாரா பசுமைக் கட்சியின் தலைவி?

Gaya Raja

Leave a Comment