தேசியம்
செய்திகள்

இராஜதந்திர சுற்றுப்பயணத்தின் போது இஸ்ரேல் மேற்கொண்ட எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு – கனடிய பிரதமர் கண்டனம்!

மேற்குக் கரையில் ஒரு இராஜதந்திர சுற்றுப்பயணத்தின் போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை கனடிய பிரதமர் கடுமையாக கண்டித்தார்.

மேற்குக் கரையில் ஒரு இராஜதந்திர சுற்றுப்பயணத்தின் போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் புதன்கிழமை (21) எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

இது குறித்த விளக்கத்தை கனடா எதிர்பார்க்கிறது என அவர் கூறினார்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணத்தை விளக்க கனடா இஸ்ரேலிய தூதரை வரவழைத்துள்ளது.

ஜெனின் நகருக்கு தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஏற்பட்ட “அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஜெனினுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குழுவில் நான்கு கனடியர்கள் இடம்பெற்றுள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார்.

கனடியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்த முழுமையான விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும்?

Lankathas Pathmanathan

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

Conservative கட்சியில் இருந்து விலகும் Quebec நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment