தேசியம்
செய்திகள்

Conservative கட்சியில் இருந்து விலகும் Quebec நாடாளுமன்ற உறுப்பினர்

Conservative கட்சியில் இருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக செயல்படவுள்ளதாக Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Pierre Poilievre கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர் Alain Rayes எடுத்துள்ளார்.

Rayes, கட்சியின் தலைமை போட்டியில் Jean Charestரை ஆதரித்தவர்.

உறுப்பினர்களின் முடிவை மதிக்கும் அதே வேளையில், “எனது சில அரசியல் இலட்சியங்கள், மதிப்புகள், நம்பிக்கைகள் கட்சியின் புதிய பாதையுடன் ஒத்துப்போகவில்லை.” என தனது முடிவு குறித்து ஒரு அறிக்கையில் Rayes கூறினார்.

Richmond-Arthabaska தொகுதியை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன் என அந்த அறிக்கையில் Rayes கூறியுள்ளார்.

Related posts

சீக்கிய தலைவர் கொலை வழக்கு முக்கியக் குற்றவாளி குறித்து தகவல் வழங்கினால் $1 மில்லியன் வெகுமதி!

Lankathas Pathmanathan

Toronto நகரசபைத் தேர்தலில் ஆர்வம் கொண்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan

Mark Carney இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment