September 12, 2026
தேசியம்
செய்திகள்

Etobicoke நகர விபத்தில் மூன்று குழந்தைகள் பலி – மேலும் மூவர் காயம்!

Etobicoke நகரில் நிகழ்ந்த விபத்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் – மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

அதிக வேகத்தில் பயணித்த வெள்ளி நிற Dodge Caravan வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சிவப்பு விளக்கில் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு நிற Chrysler வாகனத்துடன் மோதியதில் விபத்து நிகழ்ந்தது.

சம்பவ இடத்தில், 15 வயது, 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பலியானதாக Toronto காவல்துறையின் பகீர் சர்வானந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆறு வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.

10 வயது சிறுவன், குழந்தைகளின் 35 வயது தாய், 40 வயதான நபர் என மூவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் மூவரும் ஆபத்தான நிலையை தாண்டியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Dodge Caravan வாகன ஓட்டுநரான, Georgetown நகரை சேர்ந்த Ethan Lehouillier  சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை 12:30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 19 வயதான இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக 10-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

வெளியுறவுத்துறையில் சேவை குறைப்பு?

Lankathas Pathmanathan

2026 குளிர்கால Olympic: கனடாவின் முதலாவது வெள்ளிப் பதக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment