தேசியம்
செய்திகள்

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

கனடாவில் முதல் COVID தடுப்பூசிகள் திங்கள்கிழமை (14) கனடியர்களுக்கு செலுத்தப்பட்டது.

COVID தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று தருணமான இந்த நிகழ்வு V-Day என விவரிக்கப்படுகின்றது. Quebecகிலும் Ontarioவிலும் Pfizer தடுப்பூசிகள் முன்னுரிமை பெற்ற ஒரு சிறிய குழுவினருக்கு வழங்கப்பட்டது.

கனடாவில் முதலாவது தடுப்பூசியைப் பெற்ற 89 வயதான Gisele Levesque

இந்தத் தடுப்பூசியை Quebec நகரத்தில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் 89 வயதான Gisele Levesque என்பவர் திங்கள் காலை 11:25 மணியளவில் முதலில் பெற்றுள்ளார். Quebec சுகாதார அமைச்சர் Christian Dube இதனை உறுதிப்படுத்தினார். Ontarioவில் முதல் தடுப்பூசி முன்னணி சுகாதார ஊழியர் Anita Quidangen என்பவருக்கு திங்கள் மதியம் 12 மணியளவில் வழங்கப்பட்டது. Torontoவில் உள்ள பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் ஒரு பகுதியான Michener நிறுவனத்தில் அவர் இந்தத் தடுப்பூசியை பெற்றார்.

Ontarioவில் முதலாவது தடுப்பூசியைப் பெற்ற Anita Quidangen

இந்த வாரம், 10 மாகாணங்களில் உள்ள 14 தளங்களில் COVID தடுப்பூசிகள் கனடியர்களுக்கு வழங்கப்படுகின்றன. நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஊழியர்கள், COVID நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முன்னணி சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு இந்தத் தடுப்பூசி முதலில் வழங்கப்படவுள்ளது

Newfoundland and Labradorரில் இந்த வாரம் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என மாகாண முதல்வர் Andrew Furey தெரிவித்தார். Prince Edward தீவிலும் இந்த வாரம் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Heather Morrison கூறினார். New Brunswickகில் இந்த வாரம் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என மாகாண முதல்வர் உறுதிப்படுத்தினார். Nova Scotiaவில் இன்று (15) முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி Robert Strang தெரிவித்தார்.

Manitobaவில் முதலாவது தடுப்பூசி நாளை (16) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Saskatchewanனில் இந்த மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட ஏற்பாடாகியுள்ளது. Albertaவில் முதலாவது தடுப்பூசி நாளை வழங்கப்படும் என மாகாண சுகாதார அமைச்சர் Tyler Shandro கூறினார். British Columbiaவில் இந்த வார இறுதிக்குள் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என மாகாண சுகாதார அதிகாரி Bonnie Henry தெரிவித்தார்.

Nunavut, Northwest பிராந்தியம் ஆகிய இடங்களில் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளன. Yukonனில் இலைதுளிர் காலத்துக்குள் முதலாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.

Related posts

Alberta மாகாண புதிய முதல்வர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

CRB பெறவேண்டுமா? வரித் தாக்கல் செய்யுங்கள்!

Gaya Raja

Québec மாகாண வாகன விபத்தில் 5 பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment