தேசியம்
செய்திகள்

தமிழர்களின் நினைவுரிமையை கனடா போன்று உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்: நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பு நினைவகத்தை கனடாவில் திறந்து வைத்ததன் மூலம் கனடா உலகில் முன்னுதாரணமாக செயற்பாட்டுள்ளது என அனைத்துலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் இனப்படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஈழத் தமிழர்களுடன் கனடா துணையிருப்பது மிக முக்கியமான பணி என அந்த அறிக்கையில் அவர் பாராட்டியுள்ளார்.

தமிழர்களின் நினைவுரிமையை கனடா அங்கீகரித்தது போன்று உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மரபுகள், ஞாபகங்கள், நினைவுகளை அழிப்பதை ஒரு இனழிவப்பாக ஶ்ரீலங்கா அரசு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்து வருவதாகவும்  நிமால் விநாயகமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மற்றுமொரு தங்கத்தை வென்றது!!

Gaya Raja

கனடாவில் Moderna mRNA தடுப்பூசி உற்பத்திக்கான உடன்பாடு!

Gaya Raja

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan

Leave a Comment