தேசியம்
செய்திகள்

கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று தமிழ் இனப்படுகொலை: Pierre Poilievre

கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று தமிழ் இனப்படுகொலை என  Conservative தலைவர்  Pierre Poilievre தெரிவித்தார்.

தமிழ் இனப்படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

ராஜபக்ச ஆட்சியின் போர் குற்றங்களை மறந்து விடக் கூடாது என தெரிவித்த அவர், நீதிக்கான அவசரத் தேவையை வலியுறுத்தினார்.

May 2009-இல் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது வெறும் படுகொலை அல்ல, அது ஒரு இனப்படுகொலை எனவும் தனது அறிக்கையில் Pierre Poilievre குறிப்பிட்டார்.

பொறுப்புக் கூறலை கோர கனடா வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறிய அவர், கனடா ஒருபோதும் போர்க்குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

தனது தலைமையிலான Conservative அரசாங்கம் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயல்படும் எனவும் அவர் கூறினார்.

Related posts

Gordie Howe சர்வதேச பாலம்: திறக்கப்பட்ட 30 நாட்களில் 270,000 வாகனங்கள் பயணம்

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணையில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயம்

Lankathas Pathmanathan

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு!

Gaya Raja

Leave a Comment