தேசியம்
செய்திகள்

Pierre Poilievre மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவான இடைத் தேர்தலின் செலவு $2 மில்லியன்?

எதிர்க்கட்சித் தலைவரை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுத்த இடைத் தேர்தலால் வரி செலுத்துவோருக்கு $2 மில்லியனுக்கும் அதிகமான செலவு ஏற்பட்டுள்ளது.

கனடிய தேர்தல் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின்படி, Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவான இடைத் தேர்தலுக்கு வரி செலுத்துவோர் $2.3 மில்லியனுக்கும் அதிகமாக செலவழித்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் Pierre Poilievre தனது Ottawa தொகுதியில் 4500-க்கும் அதிகமான வாக்குகளினால் Liberal வேட்பாளர் Bruce Fanjoy இடம் தோல்வியடைந்தார்.

2004-ல் முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, இருபது ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் பணியாற்றிய பின்னர் Pierre Poilievre-க்கு இந்தத் தோல்வி ஒரு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்தத் தேர்தல் தோல்வியின் பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக Pierre Poilievre உடனடியாக அறிவித்தார்.

Alberta மாகாணத்தில் உள்ள  மிகவும் பாதுகாப்பான Conservative  தொகுதிகளில் ஒன்றான Battle River-Crowfoot தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிட அவர்  முடிவு செய்தார்.

Pierre Poilievre-ருக்கு வழிவிடுவதற்காகப் பதவி விலகுவதற்கு முன்னர், Conservative  கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek, April மாதம் நடந்த பொதுத் தேர்தலில் 83 சதவீத வாக்குகளைப் பெற்று அத்தொகுதியை எளிதாக வென்றார்.

2025 August 18 அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், Pierre Poilievre 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

கனடாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி March 23 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, Battle River-Crowfoot இடைத் தேர்தலின் மொத்த செலவு $2.342 மில்லியன் என குறிப்பிடப்படுகிறது.

கனடிய தேர்தல் திணைக்கள தரவுகளின்படி, Battle River-Crowfoot தொகுதி உட்பட, 2022 முதல் நடைபெற்ற 12 மத்திய இடைத் தேர்தல்களுக்கு வரி செலுத்துவோர் மொத்தமாக $21 மில்லியன் செலவிட்டுள்ளனர்.

$2.47 மில்லியன் செலவில் June 2024-ல் நடைபெற்ற Toronto–St. Paul இடைத் தேர்தலுக்குப் பின்னர், Battle River-Crowfoot இடைத் தேர்தல் இந்தக் காலகட்டத்தில் நடந்த இரண்டாவது அதிக செலவு மிக்க இடைத் தேர்தலாகும்.

Quebec மாகாணத்தின் Terrebonne தொகுதியிலும், Toronto-வின் University-Rosedale, Scarborough தென்மேற்கு தொகுதிகளிலும் April 13 அன்று மேலும் மூன்று மத்திய இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Alberta மாகாணத்தில் மூன்று இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment