September 16, 2026
தேசியம்
செய்திகள்

Conservative தலைவர் இடைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக பதவி விலக இணங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

Conservative தலைவர் Pierre Poilievre இடைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek பதவி விலக இணங்கியுள்ளார்.

நடைபெற்று முடிந்த கனடிய பொதுத் தேர்தலில் Conservative கட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தை தவற விட்டது.

கட்சித் தலைவர் Pierre Poilievre தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் Conservative கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்வரும் இடைத் தேர்தலில் Pierre Poilievre-ரை போட்டியிட அனுமதிக்கும் வகையில், Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட Damien Kurek பதவி விலகுவதாக  Conservative கட்சி வெள்ளிக்கிழமை (2) அறிவித்தது.

Damien Kurek முதலில் 2019 இல் Alberta மாகாணத்தின் Battle River—Crowfoot தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இடைத் தேர்தலில் Pierre Poilievre போட்டியிடுவதை இலகுவாக்கும் வகையில் விரைவில்” ஒரு தேர்தலை அறிவிக்க தயாராக இருப்பதாக பிரதமர் Mark Carney கூறினார்.

Related posts

இரண்டு மாதங்களில் பிரதமர் பதவி விலகுவார்?

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் Mark Carney

Lankathas Pathmanathan

கனடா-அமெரிக்க உறவின் எதிர்காலம் கனடியர்களின் கையில்?

Lankathas Pathmanathan

Leave a Comment