தேசியம்
செய்திகள்

கனடியர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த Mark Carney உறுதி

கனடியர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த பிரதமர் Mark Carney உறுதியளித்தார்.

கனடிய பொதுத் தேர்தல் Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

திங்கட்கிழமை (28) நடைபெற்ற தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று Liberal கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் Liberal தலைவர் Mark Carney முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் இரவில் பிளவுபட்ட தேசத்தில் உரையாற்றிய Mark Carney, கனடாவை தாயகம் என அழைக்கும் “அனைவரையும் தனது அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும்” என உறுதியளித்தார்.

“நாங்கள் அனைவரும் கனடியர்கள்” என குறிப்பிட்ட அவர் கடந்த காலத்தின் பிரிவினைக்கும் கோபத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் தெரிவித்தார்.

மில்லியன் கணக்கான எமது  சக குடிமக்கள் ஒரு வித்தியாசமான முடிவை விரும்பினர் என்பதை தனது வெற்றி உரையின் போது Mark Carney  குறிப்பிட்டார்.

அமெரிக்கா எங்களை ஆளும் நிலை ஒருபோதும் வராது என Mark Carney தனது உரையில் தெரிவித்தார்.

Related posts

Markham நகரசபை தேர்தலில் கிள்ளி செல்லையா வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதியை மிரட்டிய RCMP அதிகாரி?

Lankathas Pathmanathan

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment