தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கத்தை வேறு ஒரு கட்சி மாற்ற வேண்டும்: Preston Manning

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் Mark Carney வெற்றி பெற்றால் கனடாவில் பிரிவினைக்கான ஆதரவு அதிகரிப்பதைத்  தவிர்க்க முடியாது என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் Preston Manning தெரிவித்தார்.

தேர்தல் குறித்து அளித்த தொலைக்காட்சி செவ்வியில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

கனடாவை ஐக்கியமாக வைத்திருப்பதற்கான தீர்வாக,  Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கத்தை இந்த தேர்தலில் வேறு ஒரு கட்சியினால் மாற்ற வேண்டும் என Preston Manning கூறினார்.

கனடியர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்த அவர், யாருக்குப் பின்னால் ஒன்றுபடுவது என்பது தான் இப்போதுள்ள கேள்வி என தெரிவித்தார்.

ஒரு புதிய நிர்வாகத்தின் கீழ் கனடியர்கள் ஒன்றிணைய வேண்டும் என பரிந்துரைப்பதாக Preston Manning கூறினார்.

மேற்கு கனடாவின் பார்வையில் கடந்த 10 ஆண்டு கால அரசாங்கங்களை “தவறான Liberal ஆட்சி” என அவர் விவரித்தார்.

Alberta, Saskatchewan, Manitoba, British Columbia ஆகிய மாகாணங்களில் வாக்காளர்கள் இன்னும் நான்கு ஆண்டுகள் Liberal ஆட்சிக்கு உட்படுத்தப்படுவதை விரும்பவில்லை கூறினார்.

1987 முதல் 2000 வரை கனடாவின் Reform கட்சிக்கு Preston Manning தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Pickering நகரில் கத்தியால் குத்தப்பட்ட பெண் – 13 வயது ஆண் கைது!

Lankathas Pathmanathan

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: Freeland சாட்சியம்

Lankathas Pathmanathan

B.C. துப்பாக்கிச் சூட்டுடன் இந்திய அரசாங்கம் தொடர்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment