தேசியம்
செய்திகள்

புனித பாப்பரசரை கனடியர்கள் நினைவு கூறுகின்றனர்!

புனித பாப்பரசர் Francis-சை கனடியர்கள் நினைவு கூறுகின்றனர்.

புனித பாப்பரசர் Francis திங்கட்கிழமை (21) தனது 88-ஆவது வயதில் காலமானார்.

இந்த நிலையில் புனித பாப்பரசர் ஒரு முற்போக்கான தலைவராக கனடிய கத்தோலிக்கர்களால் நினைவு கூரப்படுவார்.

வதிவிட பாடசாலைகளுக்கு மன்னிப்பு கோரிய புனித பாப்பரசர் Francis-சை கனடியர்கள் நினைவு கூறுகின்றனர்.

உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக கனடிய மண்ணில் வதிவிடப் பாடசாலைகளின் பாரம்பரியத்திற்காக மன்னிப்பு கோரியது கனடாவில் அவரது மிகப்பெரிய தாக்கமாகும்.

புனித பாப்பரசரின் அணுகுமுறை முதல்குடி உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை கனடாவில் உருவாக்கியது.

அவர் கனடாவின் மிகவும் பிரபலமான ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் உலகளாவிய தலைவராக இருந்தார்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 11 மில்லியன் கனடியர்கள் கத்தோலிக்கர்களாக தம்மை அடையாளப்படுத்தினர்.

Related posts

கனடிய வணிகத் தலைவர்களை பிரதமர் சந்தித்தார்

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja

செவ்வாய்க்கிழமை முதல் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனடா!

Gaya Raja

Leave a Comment