தேசியம்
செய்திகள்

Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன: Conservative கட்சி

Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக Conservative கட்சி வெள்ளிக்கிழமை (22) தெரிவித்துள்ளது.

Patrick Brownனை கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து  தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்க தேவையான ஆதாரங்கள் கட்சியிடம் இருப்பதாக தலைமை பதவிக்கான தேர்தலை நடத்தும் குழு தெரிவித்தது.
Patrick  Brown புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பதற்கு காசு கட்டளைகளை பயன்படுத்தினார் என்ற ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக Conservative கட்சி கூறுகிறது.

தவிரவும் கட்சியில் இணைய இணங்காதவர்களையும் அவர் உறுப்பினர்களாக இணைக்க அனுமதித்தார் எனவும் கட்சி கூறுகிறது.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown இந்த மாத ஆரம்பத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக Patrick Brown இந்த வாரம் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு – நால்வர் கைது

Lankathas Pathmanathan

Quebecகில் மறு வாக்கு எண்ணிக்கை: 12 வாக்குகளால் Liberal கட்சி வேட்பாளர் வெற்றி

Gaya Raja

வேலை நிறுத்தம் முடிவடைந்தது – LCBO உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment