தேசியம்
செய்திகள்

Liberal கட்சி மீது தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த Pierre Poilievre!

“கனடாவை மீட்டெடுக்க” உறுதி அளித்ததன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை Conservative   தலைவர் Pierre Poilievre ஆரம்பித்தார்.

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிட்டார்.

Pierre Poilievre ஞாயிறு காலை தனது  கட்சியின் பிரச்சாரத்தை Québec மாகாணத்தின் Gatineau நகரில் ஆரம்பித்தார்.

Liberal கட்சி மீது தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், வரிகளைக் குறைப்பதாகவும், வாழ்க்கையை இன்னும் கட்டுப்படியாகச் செய்வதாகவும் அவர் தனது முதலாவது தேர்தல் பிரச்சார உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய வாரங்களில் கருத்துக் கணிப்புகளில் Conservative கட்சியின் ஆதரவு பின்னடைவை கண்டு வரும் நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

Related posts

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற Edmonton Oilers

கனடிய அணியை வழி நடத்தத் தேர்வானவர்கள் யார்?

Lankathas Pathmanathan

Leave a Comment