தேசியம்
செய்திகள்

புதிய பிரதமரை 151,899 Liberal உறுப்பினர்கள் தெரிவு

கனடாவின் புதிய பிரதமரை Liberal கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்தனர்.
151,899 Liberal உறுப்பினர்கள் புதிய பிரதமரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வாக்களித்தனர் என Liberal கட்சி அறிவித்தது.
இந்தத் தெரிவு ஞாயிற்றுக்கிழமை (09) வெளியாகிறது.
கட்சி உறுப்பினர்களால் Liberal கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கனடாவின் புதிய பிரதமராகிறார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau கடந்த January மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்தது.
Liberal கட்சியின் தலைமை பதவியை வெற்றி கொள்வதன் மூலம் கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படும் முயற்சியில் Mark Carney, Chrystia Freeland, Karina Gould, Frank Baylis ஆகியோர் உள்ளனர்.

Related posts

Ontarioவில் ஜந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி முன்பதிவுகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Alberta தேர்தல் முடிவு குறித்து அரசியல்வாதிகள் கருத்து

Lankathas Pathmanathan

Leave a Comment