கனடா மீது அமெரிக்க விதிக்க திட்டமிட்டுள்ள வரி விடயத்தில் கனடியர்களுக்கு ஆதரவான திட்டத்தை Liberal அரசாங்கம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
NDP தலைவர் Jagmeet Singh இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த வரிகளினால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை ஆதரிப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க அரசாங்கத்துடனும் எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றலாம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
ஆனால் கூடிய விரைவில் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனது திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை எனவும் NDP தலைவர் கூறினார்.
தற்போது March 24 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் அழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
COVID-19 தொற்று நோய் காலத்தில் நிவாரணம் மற்றும் பிற நிதி உதவிகள் வழங்கும் வகையில் நாடாளுமன்றம் அவசர அமர்வுகளை நடத்தியதை Jagmeet Singh சுட்டிக்காட்டினார்.