தேசியம்
செய்திகள்

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

பிரதமர் Justin Trudeau  வெள்ளிக்கிழமை தனது முதலாவது AstraZeneca  COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

பிரதமருடன் அவரது துணைவியார் Sophie Gregoire Trudeauவும் தனது முதலாவது AstraZeneca  தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள மருந்தகத்தில் இவர்கள் இருவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.  தடுப்பூசி  பெறுவது குறித்து தான் மிகவும் உற்சாகமாக உள்ளதாக Trudeau  கூறினார். தடுப்பூசிக்கு பெறுவதற்கு தகுதி உடையவராக இருந்தால், விரைவில் தடுப்பூசியைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் கூறினார்.

அமைச்சர்கள் Marco Mendicino,  Patty Hajdu ஆகியோரும் வெள்ளிக்கிழமை தமது முதலாவது AstraZeneca  தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர். NDP கட்சியின் தலைவர் Jagmeet Singh கடந்த புதன்கிழமை தனது முதலாவது AstraZeneca  தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole இந்த வார விடுமுறையில் தனது முதலாவது தடுப்பூசியை பெறவுள்ளார்

இன்று வரை குறைந்தது  11.4 மில்லியன் கனடியர்கள் அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசியை  பெற்றுள்ளனர்.

Related posts

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

Quebecகில் மிகக்குறைந்த வயதுடையவர் COVID காரணமாக மரணம்

Gaya Raja

கனடிய பிரதமருக்கு ரஷ்யாவினால் தடை

Lankathas Pathmanathan

Leave a Comment