தேசியம்
செய்திகள்

Ontario: கலைக்கப்பட்டது மாகாண சபை – தேர்தல் February 27!

Ontario மாகாண சபையை மாகாண ஆளுநர் Edith Dumont கலைத்துள்ளார்.

Ontario முதல்வர் Doug Fordடின் வேண்டுகோளைத் தொடர்ந்து Ontario மாகாண சபை கலைக்கப்பட்டது.

முதல்வர் Doug Ford முன்கூட்டிய தேர்தலுக்காக மாகாண சபையை கலைக்குமாறு செவ்வாய்க்கிழமை (28) கோரிக்கை விடுத்தார்.

மாகாண ஆளுநரை செவ்வாய் பிற்பகல் சந்தித்த முதல்வர், சட்டமன்றத்தின் 43வது அமர்வை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரினர்.

புதன் மாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் Ontario மாகாணத்தின் 43ஆவது மாகாண சபையை கலைக்கும் பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு முதல்வர் முன்வைத்த ஆலோசனையை மாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாக முதல்வர் Doug Ford உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் புதன்கிழமை (29) முன்கூட்டிய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கிறது.

Ontario மாகாணத்தில் February 27 ஆம் திகதி தேர்தல்   நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpபை எதிர்கொள்ள வாக்காளர்களிடம் இருந்து தனக்கு ஒரு புதிய ஆணை தேவை என Doug Ford கூறிவந்த நிலையில் இந்த தேர்தலுக்கான அறிவித்தல் வெளியானது.

Doug Ford தனது தேர்தல் பிரச்சாரத்தை  புதன் காலை Windsor நகரில் ஆரம்பிக்கின்றார்.

NDP தலைவர் Marit Stiles, Liberal கட்சி தலைவர் Bonnie Crombie, பசுமைக் கட்சி தலைவர் Mike Schreiner ஆகியோர் ஓராண்டிற்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாகும் என கூறியுள்ளனர்.

Related posts

ஒரு வருடத்தின் பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

Gaya Raja

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

Lankathas Pathmanathan

Leave a Comment