September 30, 2026
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை கலைக்கப்படுகிறது!

Ontario மாகாண சபை செவ்வாயகிழமை (28) கலைக்கப்படுகிறது.

முதல்வர் Doug Ford முன்கூட்டிய தேர்தலுக்காக மாகாண சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளார்.

Ontario மாகாண சபையை கலைத்து February 27 ஆம் திகதி முன்கூட்டிய தேர்தலை நடத்துமாறு முதல்வர் Doug Ford செவ்வாயன்று கோரிக்கை விடுக்க உள்ளார்.

Lieutenant Governor Edith Dumont டை செவ்வாய் பிற்பகல் சந்திக்கும் முதல்வர், சட்டமன்றத்தின் 43வது அமரவை முடிவுக்குக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்வார்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpபை எதிர்கொள்ள வாக்காளர்களிடம் இருந்து தனக்கு ஒரு புதிய ஆணை தேவை என Doug Ford கூறிவருகிறார்.

February மாதம் கனடாவின் ஏனைய முதல்வர்கள் குழுவுடன் Washington பயணமாவது உட்பட தேர்தல் பிரச்சார காலத்தில் தொடர்ந்தும் முதல்வராக செயல்பட திட்டமிட்டுள்ளதாக Doug Ford  கூறினார்.

NDP தலைவர் Marit Stiles, Liberal கட்சி தலைவர் Bonnie Crombie, பசுமைக் கட்சி தலைவர் Mike Schreiner ஆகியோர் ஓராண்டிற்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாகும் என கூறியுள்ளனர்.

Related posts

திருடப்பட்ட வாகனத்தால் மோதப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

SHN வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் தமிழர்கள் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment