September 23, 2026
தேசியம்
செய்திகள்

2026 playoff சுற்று வாய்ப்பை இழந்தது Blue Jays அணி!

கனடாவின் புகழ் பெற்ற baseball விளையாட்டு அணியான Toronto Blue Jays, 2026-ஆம் ஆண்டிற்கான playoff சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்தது.

புதன்கிழமை (23) நடைபெற்ற Baltimore Orioles அணிக்கு எதிரான போட்டியின் முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் Blue Jays அணி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் playoff சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

Blue Jays அணி playoff சுற்றுக்கு செல்ல எஞ்சியிருந்த அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

ஆனால், புதன்கிழமை ஆட்டத்தில் தோல்வி அடைந்து அந்த நம்பிக்கையையும் Blue Jays அணி தகர்த்தெறிந்தது.

கடந்த ஆண்டு உலகத் தொடர் (World Series) champion பட்டத்தை வெல்வதற்கு ஒரு வெற்றி என்ற மிக அருகில் வந்து Blue Jays அணி தோல்வியடைந்தது.

அந்தச் சாதனைப் பயணத்தை தொடர்ந்து 2026 ஆண்டு  இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக முடிந்துள்ளது.

Blue Jays அணி தற்போது 77 வெற்றிகள், 80 தோல்விகளுடன் (77-80 record) புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளது.

Related posts

153 million அடையாள அட்டைகள் திருட்டு: அமெரிக்க FBI விசாரணையை தீவிரமாக கண்காணிக்கும் RCMP!

Lankathas Pathmanathan

Pearson விமான நிலைய விபத்தில் 18 பேர் காயம்!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)

thesiyam

Leave a Comment