தேசியம்
செய்திகள்

இந்து ஆலய போராட்டத்தின் எதிரொலியாக மூவர் கைது: Peel காவல்துறை

Brampton நகரில் உள்ள இந்து ஆலயத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Brampton நகரில் உள்ள இந்து சபா ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட ஆலயத்தில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் பிரசன்னத்தை எதிர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் காலிஸ்தான் ஆதரவாளர்களால்  முன்னெடுக்கப்பட்டது.

மூத்தவர்களுக்கு ஓய்வூதியம் பெற உதவுவது போன்ற நிர்வாக சேவைகளை வழங்குவதற்காக இந்திய துணை தூதரக அதிகாரிகள் திட்டமிட நடவடிக்கையை ஆலயத்தில் முன்னெடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இரு குழுவினருக்கு இடையே வன்முறைத் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

கலிஸ்தான் அரசியல்வாதிகளின் அனுதாபிகளின் ஆதரவின் கீழ் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Peel பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பல சட்ட விரோதச் செயல்கள் குற்றப் புலனாய்வு பணியகத்தால் தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியது.

வன்முறைகள், குற்றச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என Peel பிராந்திய காவல்துறை தலைவர் நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.

கனடிய, இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் நிலவும் இராஜதந்திர பதற்றத்துக்கு மத்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!

Gaya Raja

Toronto நகரசபை உறுப்பினராக தெரிவானார் பார்த்தி கந்தவேள்

Lankathas Pathmanathan

Etobicoke வாகன விபத்தில் தமிழ் பெண் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment