தேசியம்
செய்திகள்

Ontarioவில் September மாத  நடுப்பகுதியின் பின்னர் அதிகூடிய ஒருநாள் தொற்றுகள் பதிவு!

Ontarioவின் தினசரி COVID தொற்றாளர்கள் பல மாதங்களில் மிக உயர்ந்த எண்ணிக்கையாக வெள்ளிக்கிழமை பதிவாகினர்.

இது September மாத  நடுப்பகுதியின் பின்னர் Ontarioவில் பதிவான அதிகூடிய ஒருநாள் தொற்று எண்ணிக்கையாகும்

வெள்ளிக்கிழமை 793 புதிய தொற்றாளர்களும் 4 இறப்புகளும் பதிவானது

இதன் மூலம் Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 625 ஆக அதிகரித்துள்ளது

இது கடந்த வாரத்தில் 537 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமையுடன் Ontarioவில் தொற்றின் காரணமாக மொத்தம் 9,959 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை இதுவரை Ontarioவில் 11.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

Related posts

வெளிவிவகார அமைச்சர் சீனா பயணம்

Lankathas Pathmanathan

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

இரண்டு வருடங்களின் பின்னர் கனடாவில் Blue Jays!!

Gaya Raja

Leave a Comment