தேசியம்
செய்திகள்

எல்லை சீர்திருத்த சட்டமூலம் அறிமுகம்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

எல்லை சீர்திருத்த சட்டமூலத்தை Liberal அரசாங்கம்  அறிமுகப்படுத்தியது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (03) தாக்கல் செய்தார்.

கனடாவின் எல்லைகளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக வலுப்படுத்த உறுதியளிக்கும் சட்டமான இந்த எல்லைகள் சட்டத்தை ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்டார்.

குடியேற்ற செயல்முறையை வலுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட இந்த புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

சட்டமூலம் C-2 அல்லது வலுவான எல்லைகள் சட்டம் எனப் பெயரிடப்பட்ட இந்தச் சட்ட மூலம் மூன்று முக்கிய கருப்பொருள்களைகொண்டுள்ளது.

புதிய எல்லை சட்டமூலத்துடன் புகலிட விதிகளை கடுமையாக்கவும், fentanyl-லை எதிர்த்து போராடவும் இது இலக்கு வைத்துள்ளது.

இந்த சட்டமூலம், பிரதமர் Mark Carney முன்னிலைப்படுத்திய பல எல்லைப் பாதுகாப்பு முன்னுரிமைகளை கொண்டுள்ளது

“இந்தப் புதிய சட்டம், கனடா எமது எல்லையை பாதுகாப்பாக வைத்திருக்கவும், நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், fentanyl -லை எதிர்த்து போராடவும், சட்டவிரோத நிதியுதவியை சீர்குலைக்கவும் உறுதி செய்யும்” என அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.

Related posts

“கடுமையான” குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Toronto காவல்துறை அதிகாரிகள்

Lankathas Pathmanathan

Toronto நகர சபை வரவு செலவு திட்டம் இறுதி செய்யப்பட்டது

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை ஒரு வருடத்தில் இல்லாத அளவு குறையும்

Lankathas Pathmanathan

Leave a Comment