September 27, 2026
தேசியம்
செய்திகள்

பிரதமருடனான சந்திப்பு குறித்து முதல்வர்கள் மகிழ்ச்சி!

கனடிய பிரதமருடனான சந்திப்பு குறித்து மாகாண முதல்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மாகாண முதல்வர்களுக்கும் பிரதமர் Mark Carney-க்கும் இடையில் சந்திப்பொன்று திங்கட்கிழமை  (02) நடைபெற்றது.

Saskatoon-னில்  நடைபெற்ற இந்த சந்திப்பில் மாகாண, பிராந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் எரிசக்தி உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதன் அவசியத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

“தேசத்தை கட்டியெழுப்ப” தேவையான திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இணக்கம் காணப்பட்ட திட்டங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

ஆனாலும் பிரதமருடன் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற சிறந்த சந்திப்பு இதுவென Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பின் வரிகளுக்கு எதிரான நகர்வுகளில் முழு நாடும் ஒற்றுமையாக உள்ளது என கூறினார்.

Related posts

கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

குறைவடையும் கனடாவின் தடுப்பூசிகளுக்கான தேவை!

Gaya Raja

சுதந்திரத் தொடரணியை முடிவுக்குக் கொண்டுவர அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்த விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment