தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் பொது சேவைக்கு Ontario முதல்வர் நன்றி

அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனின் 50 ஆண்டுகால பொது சேவைக்கு Ontario முதல்வர் Doug Ford நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை (21) Joe Biden அறிவித்தார்.

இந்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து தனக்கு கவலை இல்லை என Doug Ford வலியுறுத்தினார்.

அடுத்த ஜனாதிபதி கனடாவையும், Ontarioவையும் நியாயமாக நடத்துவதன் அவசியத்தை அவர் முன்வைத்தார்.

Joe Biden கனடியர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக விளங்கியவர் என பிரதமர் Justin Trudeau வார விடுமுறையில் கருத்து தெரிவித்திருந்தார்.

Related posts

கனடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி?

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்!

Gaya Raja

கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியானது

Lankathas Pathmanathan

Leave a Comment