தேசியம்
செய்திகள்

வாகன திருட்டு விசாரணையில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயம்

Toronto-வின் Rexdale பகுதியில் நிகழ்ந்த வாகன திருட்டு விசாரணை ஒன்றின் போது  இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

வாகன திருட்டு விசாரணை ஒன்றின் போது, தப்பியோடியவர்கள் வாகனம் காவல்துறையின் வாகனம் மீது மோதியது.

வியாழக்கிழமை (24) அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை மர்ம நபர்கள் உடைத்து திருட முயல்வதாக காவல்துறையினருக்கு அவசரத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த போது, அங்கிருந்து இரண்டு வாகனங்கள் அதிகமாக தப்பியோட முயன்றன.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஒரு சந்தேக நபரின் வாகனம் காவல்துறையினரின் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் சந்தேக நபர்களின் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை காவல்துறையினர் சம்பவ இடத்தில்  கைது செய்து, அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்காமல் இரண்டாவது வாகனம் அப்பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளது.

தற்போது அந்த வாகனத்தையும் ஏனைய  குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Toronto பெரும்பாகத்தில் வாகன  திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இலங்கையில் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை குறித்து கவலை: Lawyers’ Rights Watch கனடா

Lankathas Pathmanathan

Nova Scotia காட்டுத்தீயில் 200 வீடுகளும் கட்டடங்களும் சேதம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவுக்கு எதிராக வரிகளை அறிவித்தது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment