தேசியம்
செய்திகள்

இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர்?

இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர் Justin Trudeau ஈடுபட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவது குறித்து Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau உறுதிப்படுத்தினார்.

Justin Trudeau அமைச்சரவையில் Chrystia Freelandடின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியானது.

கனடிய அரசியலுக்கு Mark Carney ஒரு சிறந்த தெரிவாக இருப்பார் என தான் நம்புவதாக பிரதமர் கூறினார்.

நிதி அமைச்சில் Chrystia Freelandடிற்குப் பதிலாக Mark Carneyயை நியமிப்பது குறித்த உரையாடல்கள் நிகழ்வதாக Toronto Star செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை Chrystia Freelandடின் செயல்திறன் குறித்து பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Liberal கட்சியை தலைமை தங்குவதற்கு Mark Carney ஆர்வம் கொண்டுள்ளதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது.

ஆனாலும் அடுத்த தேர்தலில் Liberal கட்சியை தலைமை தாங்க உள்ளதாக Justin Trudeau மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

அதேவேளை Justin Trudeauவின் பதவிக்கு குறி வைப்பதாக வெளியாகும் செய்தியை Mark Carney மறுத்து வருகிறார்.

பிரதமர் Justin Trudeauவின் தலைமைத்துவம் குறித்து தொடர்ந்து கேள்விகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Liberal கட்சி தோல்வியை எதிர்கொண்டது பிரதமரின் பதவி விலகல் குறித்து கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது.

Related posts

Toronto-வில் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

“சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளோம்” – Donald Trump வரி எச்சரிக்கைக்கு Justin Trudeau பதில்

Lankathas Pathmanathan

Leave a Comment