February 12, 2025
தேசியம்
செய்திகள்

York காவல்துறை அதிகாரி வாகன விபத்தில் மரணம்

York பிராந்திய காவல்துறை அதிகாரி வாகன விபத்தில் பலியான சம்பவம் ஒன்று Markham நகரில் புதன்கிழமை (14) நிகழ்ந்தது

புதன் காலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 38 வயதான York பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் மரணமடைந்தார் – மேலும் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பலியான காவல்துறை அதிகாரி York பிராந்திய காவல்துறை சேர்ந்த Const. Travis Gillespie என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இவர் April 2020 முதல் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றுகிறார் என தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான ஆணின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தில் நிகழ்ந்த இரண்டாவது காவல்துறை அதிகாரியின் மரணத்தைக் குறிக்கிறது

Toronto காவல்துறையை சேர்ந்த Const. Andrew Hong கடந்த திங்கட்கிழமை Mississaugaவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர்கள் இருவருக்கும் புதன்கிழமை Ontario சட்டமன்ற அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

கனடா அடுத்த வாரம் 45 இலட்சம் தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Gaya Raja

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் சந்தர்ப்பத்தை மீண்டும் பெறும் Toronto Maple Leafs

Leave a Comment