September 16, 2024
தேசியம்
செய்திகள்

Washington பயணமாகும் Justin Trudeau!

NATO உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau, Washington பயணமாகிறார்.

NATO இராணுவக் கூட்டணியின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (08) Washington சென்றடையவுள்ளார்.

NATOவின் 32 நாடுகள் கூட்டணியின் 75வது ஆண்டு நிறைவை இந்த மாநாடு குறிக்க உள்ளது.

நட்பு நாடுகள் கனடாவின் பாதுகாப்பு பொறுப்புகளை கேள்விக்குள்ளாக்கி உள்ள நிலையில் பிரதமர் NATO உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

பாதுகாப்பு அமைச்சர் Bill Blair, வெளியுறவு அமைச்சர் Mélanie Joly ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் மையப் பொருளாக இருக்க வேண்டும் என நட்பு நாடுகளிடம் கனடிய பிரதமர் வலியுறுத்தவுள்ளார்.

NATO உச்சி மாநாடு செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமாகிறது.

Related posts

நாடளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் கனடாவின் குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

மூன்றாவது அலையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை:பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment