தேசியம்
செய்திகள்

Scarborough துப்பாக்கிச் சூட்டில் தமிழர் மரணம்

Scarborough துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழர் உயிரிழந்தார்

Scarboroughவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (06) பின்னிரவு 10 மணியளவில் Warden and Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர் 28 வயதான Pickering நகரை சேர்ந்த சுலக்சன் செல்வசிங்கம் என அடையாளம் காணப்பட்டார்.

இவர் ஒரு முன்னாள் Tow Truck சாரதி என தெரியவருகிறது

இவர் Warden வீதியில் நெடுந்தெரு 401க்கு மேற்கில் அமைந்துள்ள Shell எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த வருடத்தில் Toronto நகரின் 45வது கொலையாகும்.

சம்பவ இடத்தில், துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் செல்வசிங்கம் அமர்ந்திருந்த SUV வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும் துப்பாக்கி சன்னங்களின் காயங்கள் காணப்பட்டன.

சந்தேக நபர் வாகனத்தில் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அல்லது சந்தேக நபர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்தவர்கள் புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

Prince Edward தீவில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

Gaya Raja

B.C. மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment