September 22, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகள் நால்வர் நீதிமன்றத்தில்

கனடிய  சீக்கிய தலைவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Karan Brar, Kamalpreet Singh, Karanpreet Singh, Amandeep Singh ஆகியோர் இந்த கொலை குறித்த குற்றச் சாட்டில்  நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் நால்வரும் British Columbia சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

இந்தியாவில் சுதந்திரமான சீக்கிய நாடு அமைப்பது குறித்து வெளிநாடுகளில் வாக்களிக்கும் முயற்சியின் முக்கிய தலைவராக  Hardeep Singh Nijjar இருந்தார்.

அவர் கடந்த ஆண்டு June மாதம் Surrey நகரில் உள்ள சீக்கிய கோவில் வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு உள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்களை கனடிய பிரதமர் Justin Trudeau வெளியிட்டார்

ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்து வருகிறது.

Related posts

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

Lankathas Pathmanathan

இரண்டு தமிழர்கள் மீண்டும் மாகாண சபைக்கு தேர்வு

Lankathas Pathmanathan

நெடுஞ்சாலை வாகன விபத்தில் இருவர் பலி – மூவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment