September 27, 2026
தேசியம்
செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

புலம்பெயர்ந்தோர் COVID தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளதாக Statistics கனடாவின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

புதன்கிழமை வெளியான அறிக்கை, புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக அதிக இறப்பு அபாயத்தை எதிர்கொண்டதாகக் கூறுகிறது. தொற்றின் முதலாவது அலையின் போது கனடாவில் பிறந்தவர்களை விட புலம்பெயர்ந்தோர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்த  புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டு March மாதம் முதல் 2020ஆம் ஆண்டு July மாதம் வரை  கனடாவின் COVID இறப்புகளில் 25 சதவீதம் குடியேறியவர்கள் என தெரியவருகின்றது .

Related posts

ஒன்பது மாகாணங்கள், இரண்டு பிரதேசங்களில் தொடர்ந்து 431 காட்டுத்தீ

Lankathas Pathmanathan

எந்த ஒரு பொது வாக்கெடுப்பும் சட்டத்தின் ஆட்சியுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: Mark Carney

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் கண்டுபிடிக்கப்படும் கல்லறைகள் கனடாவின் பொறுப்பு: பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment