தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை புதன்கிழமையுடன் 12 இலட்சத்தை தாண்டியுள்ளது.

தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் புதன்கிழமையுடன் 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.அதேவேளை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்தை அண்மிக்கிறது.

செவ்வாய்க்கிழமை கனடாவில் சராசரி தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 18 நாட்களில் முதல் முறையாக 8 ஆயிரத்தை விட குறைவாக பதிவானது. ஆனாலும் சில மாகாணங்களில் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதனால் மாகாணங்கள் சில கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்த வாரத்தில் Albertaவின் சராசரி தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 1,615ஆக பதிவானது. இது இரண்டு வாரங்களுக்கு முன்னர் 1,284ஆக இருந்தது. Nova Scotia மாகாணத்தில் புதன்கிழமையுடன் முதல் இரண்டு வார கால பொது முடக்கம் நடைமுறைக்கு  வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வரும் Bloc Québécois?

Lankathas Pathmanathan

உக்ரைன் – ரஷ்யா மோதலின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் பேரணிகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment