இரண்டாவது COVID தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை Quebec 8 வாரங்களாக குறைத்துள்ளது.
இதன் மூலம் இரண்டாவது Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளுக்கான காத்திருப்பு நேரங்களை 16இல் இருந்து 8 வாரங்களாக Quebec மாகாணம் குறைக்கிறது. அதேவேளை குறிப்பிட்ட வயதினரை அடுத்த வாரம் முதல் இரண்டாவது தடுப்பூசியை பெற Quebec அனுமதிக்கிறது.
வியாழக்கிழமை வரை 75 சதவீதம் பெரியவர்கள் Quebecகில் முதலாவது தடுப்பூசி பெற்றுள்ளனர் என புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.