தேசியம்
கட்டுரைகள்

மனைவியை ‘கோழைத்தனமாக’ கொலை புரிந்த; தமிழரான கணவருக்கு 9 1/2 ஆண்டு சிறை!!

தனது மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்ததற்காக கதிர்காமநாதன் சுப்பையா என்ற தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை Ontario உயர் நீதிமன்ற நீதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு December மாதம், தனது 46 வயதான மனைவியான ஜெயந்தி சீவரத்தினத்தை படுகொலை செய்ததாக 45 வயதான கதிர்காமநாதன் சுப்பையா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜெயந்தி சீவரத்தினம், Scarborough வில் தனது இல்லத்தில் அவரது கணவனினால் அடிக்கப்பட்டு பல காயங்களுடன் இறந்தார்.

Alexander Stirling பொதுப் பாடசாலையில் அனைவராலும் விரும்பப்படும் மதிய உணவு நேர மேற்பார்வையாளராக (lunch monitor) பணிபுரிந்தவர் ஜெயந்தி சீவரத்தினம். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் மாத்திரமே அவர்களது குடும்பத்தில் வருமானம் பெற்று வந்தவர்.

இருபது வருடங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்துகொண்ட கதிர்காமநாதன் சுப்பையா, போதைக்கு அடிமையாகி வேலையில்லாதவராக இருந்தார். இந்த நிலையில், December மாதம் 12ஆம் திகதி 2017ஆம் ஆண்டு அவர்களின் மூத்த மகள் சோபியா (Sophia) தனது பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பியபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அம்மாவை தேடிய மகளுக்கு தாயின் உயிரற்ற உடலே அவர்களது படுக்கையறையில் இருந்து கிடைத்தது.

ஜெயந்தி சீவரத்தினத்தின் முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் தெளிவான அதிர்ச்சியின் அறிகுறிகள் காணப்பட்டன. (Her face, neck and chest showed obvious signs of trauma). CPR மூலம் தனது தாயை காக்க Sopia எடுத்த முயச்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையினால் அறிவிக்கப்பட்டது.

ஜெயந்தி சீவரத்தினம் முரட்டுத்தனமாக தன்னை தாக்கியதாகவும் தன்னை ஒரு கோப்பையால் தலையில் தாக்கி, துரத்த முயன்றபோது விழுந்து தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார், என்றும் கதிர்காமநாதன் சுப்பையா நீதிமன்றத்தில் கூறினார். மேலும் தான் குடிப்பதை நிறுத்த மறுத்ததால், காவல்த்துறையில் தன்னை சிக்கிக் கொள்ள வைப்பதற்கான ஜெயந்தி சீவரத்தினத்தின் “பெருந்திட்டத்தின்” (“master plan”) ஒரு பகுதி இது எனவும், அவரது காயங்கள் தானாகவே ஏற்பட்டதாக கதிர்காமநாதன் சுப்பையா தனது தரப்பில் கூறினார்.

Ontario உயர் நீதிமன்ற நீதிபதி Ian MacDonnell, கதிர்காமநாதன் சுப்பையாவின் விரிவான கதையை ஒரு “புனைகதை” (fabrication) என்று தெரிவித்தார் . அவரை இரண்டாம் நிலை கொலை குற்றவாளி அல்ல என தீர்ப்பளித்த நீதிபதி Ian MacDonnell, அவரை மனித கொலை செய்த குற்றவாளி (convicted him of manslaughter) எனக் கூறித் தண்டித்தார்.

கதிர்காமநாதன் சுப்பையாவிற்கு தண்டனை வழங்கியபோது நீதிபதி Ian MacDonnell, இதை ஒரு “கோழைத்தனமான” தாக்குதல் (“cowardly” attack) என வர்ணித்தார். மேலும் ஜெயந்தி சீவரத்தினம் தனது கணவரைத் தூண்டுவதற்கு (provoke) எதுவும் செய்யவில்லை என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் நீதிபதி கூறினார்.

ஜெயந்தி சீவரத்தினம் தனது கணவனினால் காலம் காலமாக வாய்மொழி துஷ்பிரயோகம், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளார். தனது மனைவி மீதான தாக்குதலின் போது கதிர்காமநாதன் சுப்பையா போதையில் இருந்துள்ளார். கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பல வாரங்களாக ஜெயந்தி சீவரத்தினம் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். தனது மகளின் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபோது அவர் கணவனினால் தாக்கப்பட்டுள்ளார். கதிர்காமநாதன் சுப்பையா தனது மனைவியை விட ஒன்பது அங்குல உயரமும் 200 இராத்தலுக்கும் அதிகமான கனமும் கொண்டவர்.

அதனால் ஜெயந்தி சீவரத்தினத்தினால் எதுவும் செய்திருக்க இயலாது எனக்கூறிய நீதிபதி, தற்போது 49 வயதான கதிர்காமநாதன் சுப்பையாவுக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர் ஏற்கனவே தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் மேலதிகமாக ஐந்து வருடங்களுக்கும் குறைவான காலம் கதிர்காமநாதன் சுப்பையா சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார்.

  • ரம்யா சேது-

Related posts

நீங்கள் போதிப்பதை கொஞ்சம் பயிற்சியும் செய்து பாருங்கள்!

Gaya Raja

2020: கனடிய அரசியல் நிலை என்ன?

Gaya Raja

Ontario தேர்தல் வெல்லப்போவது எங்கே?

Lankathas Pathmanathan

Leave a Comment