தேசியம்
கட்டுரைகள்

Conservative கட்சியின் தலைமையை வென்றார் Pierre Poilievre

Pierre Poilievre, Conservative கட்சியின் புதிய தலைவராக September 10ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.

ஏழு மாதம் தொடர்ந்த பிரச்சாரத்திற்குப் பின்னர், நீண்ட கால Ontario மாகாண நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Pierre Poilievre, Conservative கட்சியின் தலைமை பதவியை வெற்றி பெற்றார்.

Conservative கட்சிஆறு ஆண்டுகளில் மூன்றாவது தலைமைப் போட்டியை நடத்தியது. புதிய தலைமை பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் Scott Aitchison, Pierre Poilievre, Leslyn Lewis, முன்னாள் Quebec முதல்வர் Jean Charest, முன்னாள் Ontario மாகாண சபை உறுப்பினர் Roman Baber என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

33,800க்கும் குறைவான தேர்தல் புள்ளிகளில் 22,993 புள்ளிகளை பெற்ற Pierre Poilievre, முதல் சுற்று வாக்குப்பதிவில் வெற்றி பெற்றார். 2004ஆம் Stephen Harper, முதல் சுற்றில் வெற்றி பெற்ற பின்னர், மீண்டும் முதல் சுற்றில் வெற்றி பெறும் முதல் Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre ஆவார்.

Pierre Poilievre நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றார். ஏறத்தாள அனைத்து தொகுதிகளிலும் Conservative கட்சி உறுப்பினர்களின் முதல் தேர்வாக அவர் இருந்தார். Quebec மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் உட்பட நாட்டின் 338 தொகுதிகளில் ஏறக்குறைய அனைத்திலும் அவர் வெற்றி பெற்றதாக முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது. இது இந்த போட்டியில் Pierre Poilievre இன் முக்கிய போட்டியாளராக இருந்த Quebec மாகாணத்தின் முன்னாள் முதல்வர் Jean Charestக்கு  ஏமாற்றமாக இருக்கும்.

புதிய தலைவர் அறிவிக்கப்பட்ட Pierre Poilievre, Stephen Harper, Andrew Scheer, Erin O’Toole ஆகியோருக்குப் பின்னர் கட்சியின் நான்காவது நிரந்தர தலைவராக இருப்பார். Erin O’Toole அல்லது Andrew Scheer ஆகியோரை விடவும், ஏன் Stephen Harperரை விடவும் மிகவும் சிறப்பாக நிலையில் Pierre Poilievre கட்சி தலைமைக்கு வருகிறார்.

Pierre Poilievre 68.15 சதவீத வாக்குகளை இந்த தேர்தலில் பெற்றார். இந்த போட்டியில் Jean Charest 16.07 சதவீத வாக்குகளை பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் Leslyn Lewis 9.69 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முன்னாள் Ontario மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Roman Baber, 5.03 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார். நகர முதல்வராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினரான Scott Aitchison 1.06 சதவீத வாக்குகளுடன் இறுதி இடத்தைப் பிடித்தார்.

நீண்ட காலமாக Ottawa பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Pierre Poilievre, 2004 இல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 43 வயதான Pierre Poilievre, நினைப்பதைச் சொல்லத் தயங்காத ஒருவர் என நாடாளுமன்றத்தில் பெயர் பெற்றவர்.

Harper தலைமையிலான Conservative அரசாங்கம் 2006 இல் ஆட்சிக்கு வந்ததும், Pierre Poilievre நாடாளுமன்ற செயலாளராகவும், இளைய அமைச்சு பதவிகளையும்  வகித்தார். பின்னர் அவர் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து பிரதமர் Justin Trudeau அரசாங்கத்தின் முக்கிய விமர்சகராக மாறினார்.

தனது கட்சித் தலைமையை Pierre Poilievre எளிதாக வென்றார். அவர் மீண்டும் எளிதாக வெற்றி பெறலாம். இது கனடாவின் பிரதமர் பதவியாக இருக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.

ஆனாலும் Pierre Poilievre பெற்ற மேலாதிக்க வெற்றி கனடாவில் மிதமான பழமைவாதத்தின் மரண மணியாகும் என எச்சரிபவர்களும் உள்ளனர்.

கனேடிய குழுவின் ஒரு பகுதியாக ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது எதிர்க்கட்சித் தலைவராக Pierre Poilievre இன் முதல் செயல்களில் ஒன்றாகும்.

பின்னர் ஆரம்பமாகும் கனடாவின் பிரதமராகும் அவரது பிரச்சாரம்!

ரம்யா சேது

This article was written by Ramya Sethu as part of the Local Journalism Initiative.

Related posts

பாகம் 1 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan

மனைவியை ‘கோழைத்தனமாக’ கொலை புரிந்த; தமிழரான கணவருக்கு 9 1/2 ஆண்டு சிறை!!

Gaya Raja

மரபுத் திங்களும் …… மாமிசப் பொங்கலும்  ……

thesiyam

Leave a Comment

error: Alert: Content is protected !!