தேசியம்
கட்டுரைகள்

கனேடிய அரசில் முத்திரை பதித்த தமிழர்

கனேடிய அரசாங்கத்தின் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை, தமிழரான கௌதமன் குருசாமி பெற்றுள்ளார். ஆறு வருட காலம் மட்டுமே தொழில்முறை அரசியல் ஊழியராக பணியாற்றிவரும் இவர், 2015 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் நிறைவேற்று உதவியாளராக அரசியலில் பணியாற்ற ஆரம்பித்தவர்.

Toronto பல்கலைக் கழகத்தில் உளவியல் பட்டப்படிப்பின் போது, பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பின் தலைவராக செயல்பட்டவர் கௌதமன் குருசாமி. அப்போது இவரது திறமையை இனம் கண்ட வழக்கறிஞரான ஹரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்றத்துக்கான தனது முதலாவது தேர்தலின் போது தனது பிரச்சார மேலாளராக (Campaign Manager) இவரை நியமித்தார். அன்று ஆரம்பமான அரசியல் பணி இன்று கனேடிய சுகாதார அமைச்சரின் மூத்த கொள்கை ஆலோசகர் (Senior policy adviser for Health Minister Patty Hajdu) பதவி வரை அழைத்து வந்துள்ளது.

The Hill Times எனப்படும் சுயாதீனமான கனேடிய அரசியல் செய்திப்  பத்திரிகையின் 18 ஆவது வருடாந்த சிறந்த பணியாளர்கள் பட்டியலில் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை கௌதமன் குருசாமி பெற்று முத்திரை பதித்துள்ளார்.

சிறந்த 25 பணியாளர்களை பட்டியலிடும் The Hill Times பத்திரிகை, இந்த வருடம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த பணியாளர் (Top Overall Terrific Staffer), மிகச் சிறந்த சகலதுறை பணியாளர் (Best AllRound Terrific Staffer), அமைச்சரவையின் சிறந்த பணியாளர் (Best Cabinet Staffer) ஆகிய பிரிவுகளில் கௌதமன் குருசாமிக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது. அத்துடன்  அதிக விவரங்களை அறிந்த பணியாளர் (Most Knowledgeable Staffer) என்ற பிரிவில் முதலிடத்தை சமநிலையில் கௌதமன் குருசாமி மற்றும் ஒரு பணியாளருடன் பகிர்ந்துள்ளார்.

கௌதமன் குருசாமி Ontario மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் ‘உயிர்காப்பாளர்” (‘lifesaver’ for the Ontario caucus) என அழைக்கப்படும் நிலைக்கு ஆறு வருடங்களில் தனது திறமையை வளர்த்துள்ளார். The Hill Times பத்திரிகையின் தரவரிசைப் பட்டியலில் தமது இடத்தை வரவேற்கும் அவர், உலகத் தொற்றின் போது
சுகாதார அமைச்சருடன் பணியாற்றியமை தனக்கு கௌரவமாகும் என்பதை வலியுறுத்தினார்.

இந்த பாராட்டை தனது பணிக்கான அங்கீகாரமாக அவர் வரையறுக்கின்றார். நாடாளுமன்றத்தில் பணியாற்றினாலும், தொகுதியில் பணியாற்றினாலும், என்ன நடக்குமெனத் தெரியாத இந்தக் காலப்பகுதியில் கனேடியர்களுக்காக எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கே அனைத்துப் பணியாளர்களும் முயற்சிக் கிறோம்” என்கிறார் கௌதமன் குருசாமி 2020ஆம் ஆண்டு January மாதம் முதல் சுகாதார அமைச்சரின் Ontario பிராந்திய விவகாரங்கள் ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றிய இவர், May மாதத்தின் முற்பகுதியில் மூத்த கொள்கை ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்டார்.

-ரம்யா சேது

(தேசியம் சஞ்சிகையின் June 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் குறித்து கனேடியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Gaya Raja

தேசிய நாயகன் கருணா வின்சென்ற்

thesiyam

இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment