தேசியம்
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும்: Theresa Tam

COVID தொற்றின் புதிய திரிபின் உலகளாவிய பரவல் மத்தியில், பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிப்பதாக கூறப்படுகின்றது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam புதன்கிழமை  இந்த தகவலை  தெரிவித்தார். புதிய திரிபின் பரவல் அதிகரித்துள்ள இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தல், குறிப்பிட்ட பலனை மாத்திரம் கனடாவிற்கு  வழங்கும் என அவர் கூறினார்.

இந்த நிலையில் கனடாவின் ஒரு மூலோபாயம் – ஒவ்வொரு நாட்டிற்கும் அதிகமான பாதுகாப்புகளை இணைப்பதாகும் என வைத்தியர் Tam  கூறினார். இதுவரை கனடா 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  புதிய தொற்றின் திரிபுகளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

Alberta பிரிவினைவாதிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தது ‘தேசத் துரோகம்’?

Lankathas Pathmanathan

Quebec புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு நாட்கள் கடுமையான வெப்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment