தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு முடிவுக்கு வரும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை  முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் இருந்து  இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் Patty Hajdu அறிவித்தார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகளுக்கு விடுதிகளில் தங்குவது, 14 நாள் தனிமைப்படுத்தல் ஆகிய நடைமுறைகள்  முடிவுக்கு வரவுள்ளன. எல்லை நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கான முதல் கட்டத்தை சுகாதார அமைச்சர் Hajdu அறிவித்தார்.

COVID தொற்று காரணமாக கனடா அத்தியாவசியமற்ற பயணத்தை தடைசெய்த ஒரு வருடத்திற்கும் மேலாக காலத்தின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது. இந்த மாற்றங்கள் புதிய தொற்றுக்களின்  எண்ணிக்கை, தடுப்பூசி விகிதங்களின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது எனவும் அமைச்சர் கூறினார்.

ஏனைய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அல்லது முழுமையாக தடுப்பூசி பெறாத கனேடியர்கள் சுதந்திரமாக பயணிக்க இன்னும் சில காலம் எடுக்கும் என மத்திய அரசு கூறுகிறது. அதேவேளை vaccine passport போன்ற தடுப்பூசி ஆவணங்களின் ஆதாரம் எவ்வாறு அமையும் என்பது குறித்து மாகாணங்களுடன் தொடர்ந்தும் ஆலோசித்து வருவதாக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

Related posts

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் குறித்த நிகர்நிலை சமூக பொது கூட்டம்

Gaya Raja

உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிய Ontario தலைமை மருத்துவர் பரிந்துரை

Lankathas Pathmanathan

Leave a Comment