தேசியம்
செய்திகள்

Scarborough Southwest நகரசபை உறுப்பினர் இடைத் தேர்தல் வாக்களிப்பு அடுத்த வாரம்

Scarborough Southwest நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் தமிழரான பார்த்தி கந்தவேள் ஒருவராவார்.

பார்த்தி கந்தவேள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக வெற்றி பெற்றவராவார்.

இவர் கடந்த நகரசபை தேர்தலில் Scarborough Southwest தொகுதியின் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Gary Crawford, கடந்த July மாதம் பதவி விலகியிருந்தார்.

Scarborough-Guildwood தொகுதியின் மாகாணசபை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது   நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இந்த  மாகாணசபை இடைத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Related posts

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

Lankathas Pathmanathan

இறையாண்மை சட்டம்  தவறானதால்ல: Alberta முதல்வர் Smith

Lankathas Pathmanathan

கனடிய அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் சந்திப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment