தேசியம்
செய்திகள்

Ontario NDP துணைத் தலைவர் மத்திய Liberal கட்சியின் வேட்பாளரானார்

Ontario NDP துணைத் தலைவர் Doly Begum மத்திய Liberal கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

Ontario NDP மாகாணசபை உறுப்பினர் Doly Begum தனது பதவியில் இருந்து விலகுகிறார்.

இவரது பதவி விலகலை Ontario NDP தலைவர் Marit Stiles செவ்வாய்க்கிழமை (03) உறுதிப்படுத்தினார்

விரைவில் Scarborough Southwest தொகுதியில் நடைபெறவுள்ள மத்திய இடைத் தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளராக Doly Begum போட்டியிடவுள்ளார்

பிரதமர் Mark Carney இந்த வேட்பாளர் நியமனத்தை அறிவித்தார்

Liberal வேட்பாளராக Doly Begum போட்டியிடுவதாக அறிவித்தது  ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமைகிறது என மத்திய NDP இடைக்காலத் தலைவர் Don Davies குற்றம் சாட்டுகிறார்.

Scarborough Southwest தொகுதியின் NDP மாகாணசபை உறுப்பினராக Doly Begum 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

2015 முதல் Scarborough Southwest தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Bill Blair, திங்கட்கிழமை (02) தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

எதிர்வரும் வசந்த காலத்தில் அவர் இங்கிலாந்துக்கான கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை மத்திய Liberal கட்சியினால்  அறிவிக்கப்பட்ட இரண்டாவது இடைத்தேர்தல் வேட்பாளர் Doly Begum ஆவார்.

Dr.Danielle Martin எதிர்வரும் இடைத்தேர்தலில் University-Rosedale தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார் என Liberal கட்சி அறிவித்தது.

முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland  கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகிய போது அவரது தொகுதி வெற்றிடமானது.

தொடர்புபட்ட செய்தி:

 

Related posts

Ontario மாகாண அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் வரி பாதிப்பை கனடா இம்முறை குறைந்த அளவில் எதிர்கொள்ளும்?

Lankathas Pathmanathan

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் Manitobaவில் booster தடுப்பூசிக்கு தகுதி

Gaya Raja

Leave a Comment