September 4, 2026
தேசியம்
செய்திகள்

Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் பலியான விபத்தில் குற்றச்சாட்டுகள் இல்லை?

Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் மூவர் பலியான சம்பவம்  விபத்து ஒரு சோகமான விபத்தைத் தவிர வேறொன்றுமில்லை என கூறப்படுகிறது.

இந்த விபத்தை ஒரு குற்றச் செயல் அல்ல என RCMP தெரிவித்தது.

இந்த விபத்து குறித்த எந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படவில்லை எனவும் RCMP கூறுகிறது.

முதற்கட்ட விசாரணையில் இது ஒரு சோகமான விபத்து என்பதை மாத்திரம் குறிப்பிடுகிறது என Alberta RCMP தெரிவித்தது.

திங்கட்கிழமை (02) காலை நிகழ்ந்த வீதி விபத்தில் Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் மூவர் மரணமடைந்தனர்.

இவர்கள் மூவரும் பயணித்த வாகனம் நெடுஞ்சாலையில் சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதியதாக RCMP தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பலியானவர்கள் Southern Alberta Mustangs Hockey அணியை சேர்ந்த 17 வயதான Caden Fine, 18 வயதான JJ Wright, 18 வயதான Cameron Casorso ஆகியோர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல்கள் தொடர்ந்தும் வெளியாகி வருகிறது.

தொடர்புபட்ட செய்தி:

Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் மூவர் விபத்தில் மரணம் – தேசியம்

 

Related posts

எரிவாயு வரியை கனடிய அரசு குறைக்குமா?

Lankathas Pathmanathan

Ontario Liberal தலைமையின் முதல் வேட்பாளர்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் கோரவுள்ள Moderna

Lankathas Pathmanathan

Leave a Comment