தேசியம்
செய்திகள்

1 கோடி டொலர் தங்க நகை கடத்தல் – கனடிய தமிழருக்கு எதிரான தண்டனை உறுதி : CBSA தகவல்!

கனடா எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் (CBSA) ஒரு கோடி டொலர் தங்க நகை கடத்தல் குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட்ட கனடிய தமிழர் ஒருவருக்கு எதிராக தண்டனைஉறுதியாகியுள்ளது.

Scarboroughவில் அமைந்துள்ள Lovely Gold Inc. நிறுவனத்தின் உரிமையாளர் ரகு சின்னத்தம்பி என்பவர் இந்த தங்க நகை கடத்தல் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இரண்டு வருட விசாரணையின் இறுதியில், நகை கடத்தல் வழக்கில் இந்த தண்டனை சாத்தியப்பட்டது என CBSA தன் அறிக்கையில் தெரிவித்தது.

இந்த வழக்கின் முடிவு, CBSA எல்லை சேவை அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணைக் குழுவின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும் என CBSAயின் Toronto பெரும்பாக பிராந்திய இயக்குநர் Lisa Janes கூறினார். இந்த நகை கடத்தல் திட்டத்தின் கண்டுபிடிப்பு எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது எனவும் கனடாவின் எல்லை சட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துகின்றது எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் எல்லை பிரிவு அதிகாரிகள் பெரிய அளவில் தங்க நகைகளை பயணி ஒருவரிடமிருந்து கைப்பற்றியதை தொடர்ந்து Toronto பெரும்பாகத்தின் குற்றவியல் விசாரணை குழு தனது விசாரணையை ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட தங்க நகை கடத்தப்பட்டவை என உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் July மாதம் 2018ஆம் ஆண்டு தங்க நகை கடத்த முயன்ற மற்றொரு பயணிக்கும் இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

October மாதம் 2018ஆம் ஆண்டின் ஆதாரங்களின் அடிப்படையில், கனடா எல்லை பாதுகாப்பு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், Scarboroughவில் அமைந்துள்ள Lovely Gold Inc. நிறுவனத்தின் இயக்குநர் ரகு சின்னத்தம்பி பயணிகள் வாயிலாக தங்க நகைகளை காதணி மற்றும் கைவளையம் போன்றவற்றின் மூலம் கடத்தி வர திட்டமிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. Lovely Gold Inc. நிறுவனத்தின் இயக்குனர் ரகு சின்னத்தம்பி கடத்தலில் ஈடுபடும் பயணிகளுக்கான பயணச்சீட்டினை கொள்வனவு செய்வதுடன் அவர்கள் கடத்தி வரும் நகைகளை CBSAயிற்கு அறிவிக்க வேண்டாம் எனவும் அறிவிறுத்தியுள்ளார். இந்த முறையில் இந்த நிறுவனமும் ரகு சின்னத்தம்பியும் பதினேழு மாதங்களுக்கும் மேலாக நகை கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையின் மூலம் தெரியவந்தது.

கடந்த முதலாம் திகதி (March 01, 2021) Brampton நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில் Lovely Gold Inc. நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் ரகு சின்னத்தம்பி ஆகியோர் சுங்கவரி கட்ட தவறிய காரணத்தின் அடிப்படையில் (Customs Act, Section 153(c) – evasion of duties) தம்மீதான குற்றங்களை ஒப்புக் கொண்டனர். வழக்கின் முடிவில் அந்த நிறுவனத்திற்கும் அதன் இயக்குனருக்கும் $760, 000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் $246, 614 என்ற ஒழுங்குமுறை அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

Related posts

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

Ontarioவில் நடைமுறைக்கு வந்துள்ள தடுப்பூசி சான்றிதழ் பாவனை!

Gaya Raja

இலங்கை குறித்த கனடிய அரசின் பயண ஆலோசனை!

Leave a Comment