December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஆயிரம் கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து ஆயுதப்படை விமானங்களில் வெளியேற்றம்

இஸ்ரேலில் இருந்து ஆயிரம் கனடியர்கள் இதுவரை கனேடிய ஆயுதப்படை விமானங்களில் வெளியேறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (15) இரவு வரை, கனேடிய ஆயுதப்படையின் இராணுவ வான்வழி நடவடிக்கை மூலம் 1,000 கனடியர்கள், அவர்களது குடும்பத்தினர் இஸ்ரேலில் இருந்து Athens சென்றடைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (12) முதல் இஸ்ரேலில் இருந்து நாளாந்தம் இரண்டு விமானங்கள் கனடியர்களை Tel Aviv விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றுகின்றது.

Greece நாட்டின் Athens நகரில் தரையிறங்கும் கனேடிய ஆயுதப்படை விமானங்களில் பயணிக்கும் கனடியர்கள் அங்கிருந்து, Air கனடா விமானத்தில் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

தேவை இருக்கும் வரை இந்த விமான சேவைகள் தொடரும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கூறினார்

மொத்தம் 6,800 கனடியர்கள் இஸ்ரேலில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க வன்முறை கும்பல்களை பயன்படுத்தவில்லை: கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய மறுப்பு

Lankathas Pathmanathan

இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து கனடிய துணை பிரதமர் ஆலோசனை

Lankathas Pathmanathan

ஒரு வருடத்தின் பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

Gaya Raja

Leave a Comment