தேசியம்
செய்திகள்

பதவி விலகும் சீனாவுக்கான கனடிய தூதர்!

சீனாவுக்கான கனடிய தூதர் பதவி விலகுகிறார்.

Dominic Barton சீனாவுக்கான கனடாவின் தூதர் பதவியில் இருந்து இந்த மாத இறுதியில் விலகுகிறார்.

திங்கட்கிழமை (06) வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

தனது பதவியை விட்டு விலகுவதற்கான தூதர் Bartonனின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் Justin Trudeau இந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

Barton கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுக்கான தூதராக பணியாற்றினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடினமான சவால்களை எதிர்கொண்ட காலம் இது என பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

சீனாவின் புதிய தூதராக யார் நியமிக்கப்படுவார் என்ற விபரத்தை இந்த அறிக்கை குறிப்பிடவில்லை.

Related posts

உக்ரைன் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் – அரசர் Charles III சந்திப்பு

Lankathas Pathmanathan

அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment