தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்!

Ontarioவில் தொடர்ந்து மூன்று தினங்கள் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான COVID தொற்றுக்கள் திங்கட்கிழமை (06) ஆயிரத்திற்கும் குறைவாக அறிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை 887 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 1,184, சனிக்கிழமை 1,053, வெள்ளிக்கிழமைக்கு 1,031 என புதிய தொற்றுக்களை Ontario மாகாணம் பதிவு செய்தது.

கடந்த வாரம் 783ஆக இருந்த Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி திங்கட்கிழமை 940ஆக அதிகரித்தது.

வார விடுமுறையில் Ontarioவில் பதிவான மரணங்களுடன் தொற்றின் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது.

திங்கட்கிழமையுடன் Ontario 10,027 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை Ontarioவில் 11.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதுவரை முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

WestJet விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு

Lankathas Pathmanathan

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த முதல்வர்

Lankathas Pathmanathan

11இலட்சத்தை தாண்டியது COVID தொற்றுக்களின் எண்ணிக்கை

Gaya Raja

Leave a Comment