தேசியம்
செய்திகள்

தேடப்படும் Akwesasne நபருக்கும் சடலமாக மீட்கப்பட்ட எட்டு பேருக்கும் தொடர்பு?

Mohawk பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட எட்டு பேருக்கும் காணாமல் போனதாக தேடப்படும் Akwesasne நபருக்கும் தொடர்புகள் உள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்துகின்றனர்.

கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேச St. Lawrence கடற்பரப்பில் இருந்து எட்டு உடல்கள் கடந்த வாரம் மீட்கப்பட்டன.

இவர்களுடன் தேடப்பட்டு வரும் 30 வயதான Casey Oakes தொடர்புபட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (04) வெளியான அறிக்கை ஒன்றில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேடப்பட்டு வரும் நபர் இறுதியாக காணப்பட்ட படகு, சடலமாக மீட்கப்பட்டவர்கள் கண்டுபிடிப்பட்ட பகுதியில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேடப்பட்டு வரும் இவரை கண்டுபிடிப்பதற்காக Montrealலில் இருந்து தென் மேற்கே 130 கிலோ மீட்டர் தூரத்தில் செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் தேடுதல் முயற்சியை முன்னெடுத்தனர்.

Related posts

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள்

Lankathas Pathmanathan

Calgary வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment