தேசியம்
செய்திகள்

March இறுதிக்குள் Ontarioவில்நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 4,000 வரை அதிகரிக்கலாம்

Ontarioவில் March மாத நடுப்பகுதியில் பதிவாகும் COVID தொற்றில், 40 சதவீதமானவை புதிய திரிபாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று Ontario மாகாணத்திற்கான புதிய modelling விபரங்கள் வெளியாகின.

நாளாந்த தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் March மாத இரண்டாம் வாரம் அதிகரிக்கும்  என இன்று வெளியான modelling விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்த மாத இறுதிக்குள் மாகாணத்தின் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 500 முதல் 4,000 வரை பதிவாகலாம் எனவும் இன்று வெளியான  modelling விபரங்கள் கணித்துள்ளன.

January மாத இறுதியில், புதிய தொற்றுகளின் ஐந்து சதவிகிதம் புதிய திரிபாக இருக்கும் எனவும், February மாத இறுதியில் புதிய தொற்றுகளின் 20 சதவீதம் புதிய திரிபாக இருக்கும் எனவும் அதிகாரிகள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

September மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்:Ontario தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்!

Gaya Raja

வதிவிடப் பாடசாலைகள் குறித்து வேதனை தெரிவித்த போப்பாண்டவர் – மன்னிப்பு கோர மறுப்பு

Gaya Raja

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!