November 13, 2025
தேசியம்
செய்திகள்

6 பேர் உயிரிழந்த Alberta விமான விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்!

6 பேர் உயிரிழந்த Alberta விமான விபத்து குறித்து போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Calgary நகருக்கு மேற்கே 6 பேர் உயிரிழந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சனிக்கிழமை (29) பிற்பகல் அப்பகுதிக்கு சென்ற புலனாய்வாளர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை (30) காலை தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகவில்லை.

ஆனாலும் இவர்கள் அனைவரும் தேவாலய நிகழ்வொன்றுக்கு சென்று கொண்டிருந்ததாக RCMP கூறியுள்ளனர்.

ஒரு விமானி, ஐந்து பயணிகளுடன் விமானம் Calgary நகருக்கு மேற்கே உள்ள Springbank விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (28) இரவு புறப்பட்டு British Colombia மாகாணத்தின் Salmon Arm நோக்கி பயணித்ததாக RCMP கூறியுள்ளது.

கடினமான நிலப்பரப்பு என RCMP அடையாளப்படுத்தும் பகுதியில் இருந்து ஆறு உடல்களும் சனிக்கிழமை மீட்கப்பட்டன.

Related posts

இரண்டாவது நாளாக Ontarioவில் 600க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் !

Gaya Raja

வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள்?

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment